கலைச்செல்வி கவிதை

தெளிவுதான் கொஞ்சம் சிக்கல் மற்றபடி ஒன்றுமில்லை


ஒரே நாளில் மூன்று கனவு வந்துவிட்டது.
எல்லாம் கடன்காரக் கனவுகள்

ஒன்றில் நான் நானாக
தெரிந்தேன்
இன்னொன்றில் வேறு யாரோவாகத் தெரிந்தேன்

மூன்றாவது கனவில் கண்களுக்குத் தட்டுப்படாமல் ஒரு புள்ளியாக இருந்தேன் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது..

அனேகமாக அந்த மூன்றாவது தான் உண்மையில் நான் என்பதாக இருக்கவேண்டும்..
அதன் சத்தம் தான் அதிக இரைச்சலைக் கொடுக்கிறது நேற்றிலிருந்து

இரைச்சல்களைத்தான் எத்தனை அவமதிக்கிறது நிதர்சனங்கள்
ஒன்றுக்கும் உதவாதவை.
என்றும்
வெற்றுக் கூச்சல் என்றும்

கடைசியாக என்னிடம் மிச்சமிருப்பதெல்லாம்
ஒன்றுதான்

நாளை நான்
கனவிலிருந்து
வெளியே வந்துவிடவேண்டும்
இல்லையென்றால்
கனவில் தெரிகிற புள்ளியை மறைக்க வேண்டும்

கலைச்செல்வி
29.9.2923