ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது/அழகியசிங்கர்

ஔவையார்

(தனிப்பாடல் திரட்டு)

(சோழன் கம்பரைப் போலப் பெரிய காப்பியம் பாடுபவரி ல்லை’ என்ற போது ஔவையார் பாடியது.)

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல் கரையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் – யாம் பெரிதும்

வல்லாமே என்று வலிமைசொல் வேண்டாம் காண்!

எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது.

தூக்கணாங்குருவியின் கூடும், வன்மையான அரக்கும் கரையான் புற்றும் தேன்கூடும் சிலந்திக் கூடும் ஆகியவை எல்லாராலும் செய்யக்கூடியவை அல்ல; ஆதலால். யாம் மிக்க திறமையுள்ளவர் என்று ஒருவர் தம் பெருமையைக் கூறக்கூடாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலை செய்தல் எளிதாகும்.

என் கருத்து

ஔவையார் கூறும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஔவையார் பொறாமைக் கொள்ளும்படி சோழ மன்னன் கம்பனைப் புகழ்ந்ததின் விளைவு இந்தக் கவிதை. சிறப்பான கவிதை.

One Comment on “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது/அழகியசிங்கர்”

Comments are closed.