நீ என் கையை தானே தொட்டாய் என்னை தொடவில்லையே!/சிவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

(‘தாத்தா என் கையை தொடு)

1939 ம் வருடம். ஒரு நாள் பகவான் ஒரு சில அடியார்களுடன் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பகவான் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆச்சரியமான ஒரு சிறிய சம்பவத்தைப் பற்றிக் கூறினார்.

பகவான் கூறினார்: ‘மயிலாப்பூரில் ஆசிரியராக இருந்த சேஷகிரி ஐயர் என்பவருடைய கடைசி மகன் சதானந்தன். அந்தப் பையனுக்கு இளவயது. அவன் ஒரு நாள் என் அருகில் வந்து, ‘தாத்தா என் கையைத் தொடு,’ என்றான்.

உடனே நான் அந்தப் பையனின் கையை இப்படித் தொட்டேன், என்று கூறி அப்போது பகவான் அருகில் வந்து கொண்டிருந்த குர்ரம் சுப்பராமய்யா என்பவரின் கையைத் தொட்டார்.
(பகவான் என் கையைத் தொட்டதும் என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது என்கிறார் சுப்பராமய்யா)

பகவான் அந்தப் பையனின் கையை தொட்டதும், அந்தப் பையன், ‘நீ என் கையைத் தானே தொட்டாய்;
என்னைத் தொடவில்லையே’ என்று பளிச்சென்று கூறினான்.

‘அந்தப் பையனின் சுட்டியான இந்தப் பதிலைக் கேட்டதும் நான் அதிசயத்துப் போனேன்’ என்று கூறி முடித்தார் பகவான்.

இப்படி பகவானிடம் வந்து மிகவும் இளம் வயது உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் அபார ஞானத்துடன் பேசிய பல சந்தர்ப்பங்கள் பகவானது வாழ்க்கையை வாழ் நாட்களில் நடந்துள்ள அதிசயத்தை என்னவென்று கூறுவது

One Comment on “நீ என் கையை தானே தொட்டாய் என்னை தொடவில்லையே!/சிவ.தீனநாதன்”

Comments are closed.