கற்றார்முன் வாய் திறக்கக்கூடாது/பதிவு : அழகியசிங்கர்

(‘கம்பரை யார் வெல்ல இயலும்?’ எனச் சோழன் வினவிய போது ஔவை பாடியது)

ஔவையார்

(தனிப்பாடல் தொகுதியிலிருந்து)

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் ; கற்றோர் முன்

கோணாமல் வாய் திறக்கக் கூடாதே; – நாணாமல்

பேச்சுப்பேச்சு என்னும் பெரும்பூனை வந்த க்கால்.

கீச்சுக்கீச்சு என்னும் கிளி.

விளக்கம்:

கற்றவரைக் காணாதபோது ஒருவர் தம் விரும்பியவற்றை யெல்லாம் உரத்துப் பேசலாம். ஆனால் கற்றவர் முன்னர் நாணாமல் வாய் திறக்க இயலாது. கிளி தனக்கு கற்பித்தவற்றை அஞ்சாமல் பேசும். ஆனால் தனக்குப் பகையான பூனை யொன்று வருமானால் அச்சத்தால் அது ‘கீச்சு கீச்சு’ என்று கதறும்.

என் கருத்து

இதுவும் வித்தியாசமான கவிதை. நம்மைச் சுற்றிலும் படிக்காதவர்கள் அதிகம். படித்தவர்போல் காட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பூனையைப் பார்த்து கிளி கீச்சு கீச்சென்று கத்துவதுபோல்.