மழை

உமா பாலு

முதல் நாள் சாரல் போல் துவங்கி
பின்னர் சற்றே வலுக்க ,
ஆகா ,செடிகளுக்கு இன்று
தண்ணீர் ஊற்றும் வேலை மிச்சம்
என மகிழ்ந்தேன்
அன்றிரவும் தொடர இந்த வருஷம்
கோடையில் தண்ணீர் பஞ்சம்
இருக்காது என சமாதானம்
செய்து கொண்டேன்
காலை எழுந்தவுடன் கடல்
போல் தண்ணீர் தெரு எங்கும்
அடடா என்ன இது என்று
மலைத்துப் போய் நிற்கையில்
வீடுகளில் நுழைந்து வியாபித்து
சேதங்களை ஏற்படுத்தி
செருக்குடன் சிரிக்கிறது
வெளியேற விருப்பமில்லா
வேண்டாத விருந்தாளி போல.