விளிம்பு நிலை மக்களின் அவல நிலை

வாசுதேவன் 

விளிம்பு நிலை மக்களின் அவல நிலைமையை காட்சிப்படுத்தியதற்கு வங்காளத்தில் ரித்விக் கடக்கும், மிருணாள் சென்னும் இருந்தனர்.

மலையாளத்தில் அடூரும், ஜான் ஆஃப்ராஹமும் இருந்தார்கள். கன்னடத்தில் கிருஷ் கர்நாட் இருந்தார்.

பொன்மலை கம்யூனிஸ்ட் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட ”பாதை தெரியுது பார்” படத்தை தோற்கடிக்க வேண்டும் என ஏவிஎம் செட்டியார் அதன் விநியோக உரிமையை வாங்கி ஒதுக்குப்புறமான தியேட்டரில் இரண்டு நாட்கள் ஓடவிட்டு கம்யூனிஸ்டுகளை கோடம்பாக்கத்திலிருந்து விரட்டி அடித்தார்.

அதற்குப்பிறகு ருத்ரையா வந்தார். அவராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. காந்த்/ஹாசன் கைகளில் கோடம்பாக்கம் சிக்கியது. மக்கள் ரசனையை மழுங்கடித்ததில் பாலசந்தர், மணிரதனம், எஸ்பி.முத்துராமன், சங்கர், போன்றவர்கள் முக்கியமானவர்கள். ஏவிஎம்,திருபாதி, சன் பிக்சர்ஸ் என பெரும் முதலாளி தயாரிப்பாளர்கள் மக்களின் உணர்வுகளை சுரண்டி கொழுத்த லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இன்றளவிலும் ஒரு சீரியஸ் திரைப்படம் தமிழில் வெளிவருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

விளிம்புநிலை மக்களை கேட்க நாதியில்லை. இவ்வாறான அவல சூழலில் ஜெய்பீம், கர்ணன், மேற்குதொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், சார்பேட்டா போன்ற படங்களில் குறைகள் இருந்தாலும் இத்தகைய படங்களை ஊக்குவிக்கவேண்டும்.

நமக்குதான் ரேவும், சென்னும், அடூரூம் கிடைக்காது என்கிறபோது எல்லாவற்றிலும் லொள்ளை பார்ப்பது சரியல்ல. இருக்கிறவர்களை வைத்து திருப்தி படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

One Comment on “விளிம்பு நிலை மக்களின் அவல நிலை”

Comments are closed.