ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 32

07.11.2021 –  ஞாயிறு


ஆசிரியர் பக்கம்

அழகியசிங்கர்

மோகினி : ஒரே மழை.

அழகியசிங்கர் : ஆமாம்.  எனக்குத் தெரியவில்லை.  வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.  

ஜெகன் : கோவிந்தன் ரோடில் முழங்கால் வரை தண்ணீர்.

அழகியசிங்கர் :  நான் போய்ப் பார்க்க வில்லை.  என் கதை தினமணி கதிரில் இன்று பிரசுரமாகியிருந்தது.

மோகினி :  ‘அப்பாவின் அறை’ என்ற கதையா?

அழகியசிங்கர் : ஆமாம்.  இரண்டு வருடங்களுக்கு முன் எழுதியது.

ஜெகன் :  இப்போதாவது பிரசுரமானதென்று சந்தோசப்படுங்கள்.

மோகினி :  தினமணி கதிர்-சிவசங்கரி சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் அனுப்பிய கதைதானே.

ஜெகன் : ஆமாம்.  அழகியசிங்கர் அதற்குத்தான் அனுப்பினார்.

அழகியசிங்கர் : அந்தக் கதைக்கு எந்தப் பரிசும் தரவில்லை.  ஆனால் என் கற்பனையோ அதற்கு எதாவது பரிசு கிடைத்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

மோகினி : ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எந்த அளவிற்குக் கதையைத் தேர்ந்தெடுக்கத் திறமை வாய்ந்தவர்கள் என்று தெரியாது. 

ஜெகன் : தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் வருத்தமா

மோகினி : வருத்தம் இல்லாமல் இருக்காது.

அழகியசிங்கர் : வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்? நான் உண்மையிலேயே அதிகமாகக் கதைகள் எழுதுபவன் இல்லை. 

மோகினி :  யாராவது கதை வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்.

ஜெகன் :  உடனே எழுதிக் கொடுத்து விடலாம்.

அழகியசிங்கர் :  உண்மையில் அப்படி எழுதிக் கொடுத்து விட முடியும்தான்.  எதாவது ஒன்றை எழுது எழுது என்று யோசித்து எழுதி விடலாம். 

மோகினி :  கதையை எல்லோரும் தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது வழக்கம் தானே?

அழகியசிங்கர் : ஆமாம்.  இதோ இப்போதே ஒரு கதை எழுத ஆரம்பிக்கிறேன்.  எவ்வளவு நாள் ஆகிறது என்று பார்க்கலாம்.

ஜெகன் : இன்று போதும்.

மோகினி : நம் சபையைக் கலைத்து விடலாம்.

அழகியசிங்கர் : நல்ல இரவு மலரட்டும்.