வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்

வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று தனியாக முழக்கமிட்டவர் வள்ளலார். அவருடைய 200 வது பிறந்தநாள் நேற்று.

ஜாதி சமய மத இன வேறுபாடுகளை கலைத்தவர்.

ஒவ்வொரு முறையும் திரு அருட்பாவை படிக்கும் போது பாடலின் ஓசை நயம் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை. வள்ளலார் தான் நான் கவிதை எழுதுவதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்.

விருட்சம் சார்பில் வள்ளளாரின் திருவருட்பாவில் இருந்து ஒரு பகுதியாக புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

வள்ளப் பெருமானின் அறநெறிகளை படிக்கும் போது

ஒரு இடத்தில் கருமாதி, திதி முதலிய சடங்குகள் வேண்டாம் என்று குறிப்பிடுகிறார். இது பெரிய புரட்சிகரமான கருத்தாக எனக்குத் தோன்றும். இதை அவர் 1870 ஆம் ஆண்டில் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்

அதே போல் இறந்தவர்கள் எரிக்காது சமாதியில் புதைக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஏன்அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது புரியவில்லை. சமாதியில் புதைக்க வேண்டுமென்றால் இன்றைய மக்கள் தொகைக்கு சமாதி வைப்பதற்கு தேவையான இடம் வேண்டும். அந்த இடமே கிடைக்காது.

அகம் பழுத்த சிவஞான அமுதே என்று குறிப்பிடுகிற வள்ளலாரின் திருவருட்பாவின் ஒரு பகுதியான அருட்பெரும் ஜோதி அகவலை வெளியிடுவதில் விருட்சம் பெருமை கொள்கிறது. இந்தப் புத்தகம் விலை ₹ 40.

One Comment on “வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்”

  1. மானிட உலகில் வந்த ஒரு ஜோதி. வாழ்ந்த காலத்தில் மனித்த்தைப் போற்றிய ஒரு ஜீவன்.

    என் அம்மா கூட என்னிடம் என்னை எரிக்காதே, புதைத்து விடு, அப்போதுதான் பல புழு பூச்சிகளுக்கு இரையாவேன் என்றார்.
    ஆனால் நீங்கள் கூறியது சரியென்றே படிகிறது, புதைப்பதற்கு இடமில்லாமல் போய்விடும்.

Comments are closed.