
பேயோன்
பணம் சம்பாதிக்க வேறு
வழிகள் என்னென்ன என்று
தலையைப் பிய்த்துக்கொண்ட
காலம் ஒன்றுண்டு
சட்டைப்பை இப்போதும் காலிதான்
ஆனால் செருப்புக்கேற்பக் காலை
வெட்டிக்கொண்டாயிற்று
இன்னும் வெட்ட இடமும் இருக்கிறது
பணச்சோர்வுதான் எப்போதும் உண்டே
பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக்கொள்.
– பேயோன்
