
எஸ்.சுரேஷ்
பெய்யெனப் பொய்த்திடும் பொய்யெனப் பெய்திடும்
மையலார் மனம் போல் மழை
ஆடியில் காற்றில்லை ஐப்பசியில் பெருமழையென
வேடிக்கை யாம்வா னிலை
நீரோடும் வழியெல்லாம் காரோட வழிசெய்தோம் போராடும்
நிலைவந் ததே
விரிசடை எங்கே கிரிதரன் எங்கே
தெரியாது மனம்தே டுதே
ஒருமாரி தாங்காத உட்கட் டமைப்பிங்கு மும்மாரி
தான்கேட்கு தே
ஆண்டாண்டு துயருற்றும் அறியாத சனமிங்கு காணட்ராக்டர்
காட்டில் மழை
ஏரிவாய்க் காலெல்லாம் ஏரியா பிரித்தபின் மாரியைக்
குறைசொல்வ தோ
எதிர்வரிசை தானமரந்து ஏளனம் செய்தவராம் புதிராச்சு
அவர்க்கும் மழை
கொடையென்று புகழுவார் மாரியைத் தானின்று
குடையேந்தி நொந்து போனார்
ஆயிரம் குடைகள் மறைத்துநின் றாலும் ஓயாது பெய்யும்
மழை

ஆஹா