வளவ. துரையன் கவிதை

எப்போதும்

எப்போதும்
கோவில் யானையின்
கண்களில்
காடு இருக்குமாம்

காக்கையின்
உள்மனத்தில் அச்சம்

ஒடிந்த கிளைக்குத்
துளிர்க்க ஆசை

சிறுகுஞ்சிற்கோ
பறக்க விருப்பம்

விழுந்த இலையில்
நிறைய விரும்பும் நாய்

பெட்டைக் கோழிக்கோ
இன்றைக்காவது

சேவலிடம் மிதிபடாமல்
தப்பிக்க வேண்டும்