விலங்கு ரூபத்தில் சித்த புருஷர்கள்/சிவ தீனநாதன்

(ரமண விருந்து பாகம் 3)

(அண்ணாமலையில் அதேபோல் சித்தர்கள் பலர் இருப்பதாகும் அவர் கூறினார். )

பகவான் சன்னிதானத்தில் ஒரு சமயம், ‘மனிதர்கள் விலங்குகளாக மறுபிறப்பு எய்துவார்களா?’ என்ற கேள்வி எழுந்தது.

அதற்குப் பகவான், ‘ஆஹா! தாராளமாக இன்று கூட அவர்கள் இங்கு பிறப்பதற்காக அந்த ஊருக்கொள்ளலாம்’ என்று கூறினார்.

உதாரணமாக, ஒரு நாள் நாய் ஒன்று ஆசிரமத்தின் பின்புறத்தில் ஒரு பாறையில் நின்று இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. உணவு எடுத்துச் சென்று அந்த நாய்க்குத் தரும்படி ஒருவரைப் பகவான் பணித்தார். அந்த நாய் உணவை உட்கொண்டு அங்கிருந்து அமைதியாகச் சென்றது. அதன்பின் அது காணப்படவேயில்லை.

அது ஒரு சித்தர் என்றும் பசியுற்றதால் அந்த உருவத்தில் உணவு உட்கொள்ளவே அங்கு வந்ததாகவும் பகவான் விளக்கினார். அண்ணாமலையில் அதுபோல் சித்தர்கள் பலர் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மலையைச் சார்ந்து எப்போதும் ஏழு ஞானிகள் இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா கூறப்படுவது உண்மையா?’ என்று ஒர் அடியார் கேட்டார்.

‘ஏன் அதற்கு மேலும் இருக்கலாம்; யாரால் கூற முடியும்? அவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு? அவர்கள் பிச்சைக்காரர்கள் போல் தோன்றி சாக்கடையில் விழுந்தோ அல்லது வேறு அடையாளம் காண முடியாத முறையிலோ இருப்பர். அது பற்றி ஏதும் கூறச் சாத்தியமில்லை என்று பகவான் கூறினார்.