சஞ்சனா/எழுத முடியாத படைப்பாளியின் தவிப்பு

(ஆங்கிலத்தில் இருந்து தமிழில் அழகியசிங்கர்)

என்னுடைய கற்பனை மூடப்பட்டுள்ளது
எழுத முடியாத படைப்பாளியாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்

ஒரு கவிதையாலவது ஒரு பாட்டாவது எழுதலாம்

ஆனால் அதற்கான தாளமும் கவிதை வரியோ வருவதில்லை

நட்சத்திரங்களின் பூரண ஒளியைக் குறித்தும் எழுதலாம்.


நட்சத்திரங்கள் உதிக்காத இரவாக இன்று இல்லாமலி ருந்தால்.


நீலநிற ஆழ்க் கடலைப் பற்றியும்


அதேபோல் நூற்றுக்கணக்கான விஷயங்களும் என் முன் உள்ளன.


உண்மையில் எதுவும் என்னை எழுதத் தூண்டவில்லை


அழகான கவிதை வரிகளைக்கொண்டு ஒவ்வொரு பக்கமும் நிரப்பலாம்
எனக்கு எழுத ஆசை இல்லை என்பது வருத்தமாகதான் உள்ளது.


நான் எதாவது சாபத்திற்கு உள்ளாகி யிருப்பேன்


இதைச் சரி செய்ய ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும்

அது என் மனதைத் திறந்து விடும்


பாடுவதற்கு எந்தக் கவிதையுமில்லை என்னிடம்


ஆனால் பாடமுடியாத கவிதையை குறித்து ஒரு கவிதை உள்ளது

(

One Comment on “சஞ்சனா/எழுத முடியாத படைப்பாளியின் தவிப்பு”

Comments are closed.