மெல்லிய மழை பொழிந்துகொண்டிருக்கிறது

சௌவி

கட்டி முடிக்கப்பட்டு
இன்னும் கலசம் வைக்கப்படாத
கோபுர உச்சியில்
பறவையொன்று அமர்ந்திருக்கிறது
கலசமென

மெல்லிய மழை பொழிந்துகொண்டிருக்கிறது
தீர்த்தத் தெளிப்பென

எவ்வித அறிவிப்புமின்றி
கும்பாபிஷேகம்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது

-சௌவி

One Comment on “மெல்லிய மழை பொழிந்துகொண்டிருக்கிறது”

Comments are closed.