தொலைந்து போய்க் கொண்டிருப்பவர்கள்

ஶ்ரீதர்

சத்தத்தோடு
முத்தமிட்டது
மாமழை!
கடும் சந்தத்தோடு
கொட்டி முறைக்குது
பேய் மழை!

துளிகள் தழுவ
துள்ளிய காலங்கள்
அழிஞ்சு போச்சு!

வான் பொய்த்தாலும்
வாழ்வு போச்சு!
நின்று பெய்தாலும்
நிம்மதி போச்சு!

உந்தன் வழித் தடமதை
அழிச்சிட்டோம்
எங்களை நாங்கள்
தொலைச்சிட்டோம்!