விமலாரமணி  அவர்களின் திரௌபதி சிறுகதை விமர்சனம்/கோ.வைதேகி


தாயை இழந்த சிறுமியான திரௌபதியை நாடகக் கம்பெனி வைத்து நொடித்துப்போன அவளின்  தந்தை நன்றாக நடந்து கொண்டிருக்கும் வேறொரு நாடகக் கம்பெனிக்குப் பிழைப்புத் தேடி அழைத்து வருகிறார்.அங்கே வளரும் திரௌபதி பெரிய பெண்ணானவுடன் கதாநாயகியாக திறம்பட நடிக்கத் துவங்குகிறாள்.அந்நாடகக்குழுவில் கதாநாயகனாக நடிக்கும் சிங்காரம் எதிர்மறை குணம் கொண்டவன்..வில்லனாக நடிக்கும் கதிர்வேலன் நேர்மறை குணங்கொண்டவன்
திரௌபதியும் கதிர்வேலனும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர்.சிங்காரத்திற்கும் திரௌபதியின்பால் ஈர்ப்பு இருக்கிறது.திரௌபதியின் தந்தை இறந்துவிட நாடகக் கம்பெனியும் மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட திரௌபதியுடன் கூட நடிக்கும் சுசீலா அக்கா திருமணமாகி செட்டிலாகி விடுமாறு திரௌபதியிடம் கூறுகிறாள்.திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஊருக்குச் செல்லும் கதிர்வேலன்  திரும்பி வராதிருக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திரௌபதியை மிரட்டி சிங்காரம் திருமணம்  செய்து கொள்கிறான்..பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் திரௌபதி தந்தி எனும் குரல் கேட்டு வீட்டிற்கு வெளியில் வந்து பார்க்கிறாள்.கதிர்வேலன் மிகவும் சீரியஸாக இருப்பதாக தந்தியில் செய்தி இருக்கிறது.சிங்காரம் பிறகு வருவதாகக் கூறி  திரௌபதியை  போகச் சொல்கிறான்.அவள் தன் மகன் வினோத்தை அழைத்துக் கொண்டு  பட்டினம் செல்கிறாள்.அங்கு  கதிர்வேலன்  இருப்பிடத்தைத் தேடியலைந்து கண்டுபிடித்து செல்லும் போது  நாடகக் கம்பெனி ஆட்கள் சிலரும் ஏற்கனவே வந்திருக்கின்றனர்.அதில் சுசீலா அக்காவும் இருக்கிறாள்
.கதிர்வேலன் இன்னும் சில மணி நேரங்கள் தான் என்ற நிலையில் படுத்துகிடக்க  திரௌபதியைப் பார்க்கும் அவனின் கண்கள் பழைய காதலின் உயிர்ப்பில் ஒளிர்கிறது.கதிர்வேலனின் இந்த நிலைக்கு சிங்காரம் மெல்லக் கொல்லும் விஷத்தை கதிர்வேலனுக்குத் தெரியாமல் அம்பில் தோய்த்து எறிந்தும், மதுவில் கலந்து  நாடகக்காட்சியின் போது பருகக் கொடுத்துமிருக்கிறான்.இதனால் உடல்நிலை பாதிக்க்கப்பட இனி சரி செய்ய இயலாது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு வரும் போது திரௌபதி சிங்காரம் திருமணம் முடிந்து விட்டது என சுசீலா கூறுகிறாள். இதை அறிந்த திரௌபதி கதிர்வேலன் காதருகில் சென்று எதையோ கூறிவிட்டு தன் மகனை அழைத்து அவனிடம் நம் பிள்ளை வினோத் என அறிமுகப்படுத்த அவன் கைகளை இறுக்கிப் பிடித்தபடி நிறைந்த மனதுடன் உயிர் விடுகிறான் 


.அங்கு வரும் சிங்காரம் இதைக் கேள்விப்பட்டு திரௌபதியை கேவலமாகப் பேசி தன்னை அவள் ஏமாற்றியதாகக் கூறி கோபமாக சென்று விடுகிறான்.
இதைக் கண்டு திரௌபதியின் வாழ்வு வீணாகிப் போனதாக வருந்தும் சுசீலாவிடம் வினோத் சிங்காரத்தின் பிள்ளைதான் என்றும்  சிங்காரம் செய்த தப்பிற்கு தான்கூறிய பொய் அவனுக்கான தண்டனையாக இருக்குமென்று கூறிவிட்டு  பெண்ணே ஒரு புதிர்தானே என்று அழுகிறாள் திரௌபதி எனக் கதை முடிகிறது.

இக்கதையில்  விஷம் தோய்ந்த அம்பு வாலியாக நடிக்கும் கதிர்வேலன் மேல் இராமனாக நடிக்கும் சிங்காரத்தால் எய்யப்படுவதாகவும் ,அடுத்து  கதிர்வேலன் கீசகனாக நடிக்கும் போது அதே சிங்காரம் குப்பியில் இருக்கும் மதுவில் யாருமறியாமல் விஷங்கலந்து கொடுப்பதாகவும் வருகிறது.கதைக்களனைப் பார்க்கும் பொழுது இந்த விஷயங்கள் சற்று முரணாகப்படுகின்றன

.மேலும் கதிர்வேலன் இறக்கும் தருவாயில் அவனின் நிம்மதிக்காக  வினோத்தை தனக்கும் கதிர்வேலனுக்கும் பிறந்த பிள்ளை என்று கூறுவதும் அதை கதிர்வேலன் நம்புவதும்  திரௌபதி திருமணத்திற்கு முன்பு கதிர்வேலனுடன் உடல் ரீதியான தொடர்பு கொண்டிருந்திருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது.பின்   அது உண்மையில்லை சிங்காரத்திற்கு தண்டனை அளிப்பதற்காக அவ்வாறு கூறினேன் என்று சுசிலாவிடம் சொல்வதும்   கதாசிரியர் இறுதியில் திருப்பமேற்படுத்த வேண்டும்   என்ற ஒரே நோக்கில் சற்றே நாடகத்தன்மையுடன்  உள்ளார்ந்த செய்தியை சரியாக வெளிப்படுத்தவில்லை என்பது கண்கூடு.

please see the audio recordings. 

Show quoted text