சார்லஸ் சிமிக்/போர்


தமிழில் : க. மோகனரங்கன்

முதல் பனி
பொழிந்திடும் மாலையில்
ஒரு பெண்ணின் நடுங்கும் விரல் பலியானவர்களின் பட்டியலில்
கீழிறங்கிச் செல்கிறது .
வீடு குளிர்ச்சியாகவும்
பட்டியல் நீளமாகவும் இருக்கிறது.
அதில் நம்முடைய பெயர்கள்
அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.