போர்ஹெஸ்/அமைதியைப் பற்றிய வீண்பெருமை




தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி



ஒளியைப் பற்றிய எழுத்துகள் இருட்டைத் தாக்குகின்றன
எரிமீன்களை விட இன்னும் அதிகமாக வியக்கத்தக்க விதத்தில்.
அறியமுடியாத உயரமான நகரம் நாட்டுப்புறத்தை எடுத்தாள்கிறது.
எனது வாழ்க்கையும் மரணத்தையும் பற்றிய நிச்சயத்துடன்
நான் வாழ்க்கையில் முன்னேற வேட்கை மிகுந்தவர்களைக் கவனிக்கிறேன்
அவர்களை நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
அவர்களுடைய நாள் பேராசை மிக்கதாய்
காற்றில் மிதக்கும் பிணை சுருக்குக் கயிறு போல இருக்கிறது.
அவர்களுடைய இரவு எஃகின் பெருங்கோபத்திலிருந்து ஓய்வாக,
எந்நேரமும் தாக்கலாம் என்பதாக இருக்கிறது.
அவர்கள் மனிதநேயத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
எனது மனிதநேயம் நாம் அனைவருமே ஒரே ஏழ்மையின் குரல்கள் என்பதிலிருக்கிறது.
அவர்கள் தாய்நாட்டைப் பற்றி பேசுகிறார்கள்.
எனது தாய்நாடு
ஒரு கிடாரின் லயம்
ஒரு சில ஓவியங்கள்
ஒரு பழைய வாள்
அந்தி சாய்கையில் காற்றாடி மரக்கூட்டத்தில்
காணக்கூடிய பிரார்த்தனை.
காலம் என்னை வாழ்ந்துகொண்டிருக்கிறது.
எனது நிழலை விட அதிக மௌனமாக,
மேன்மை வாய்ந்த, அதிகமும் விரும்பக்கூடியப்பெருந்திரளை
நான் கடந்து செல்கிறேன்.
அவை இன்றியிமையாதவை, தனித்துவமானவை, எதிர்காலத்துக்குத் தகுதியானவை.
எனது பெயர் யாரோஒருவர், ஏதேனும்ஒருவர்.
வெகுதூரத்திலிருந்து வரும் ஒருவர்
எங்கேயுமே சென்றடைய எதிர்பார்க்கப்படுவதில்லை
என்பதைப் போல
நான் மெதுவாக நடக்கிறேன்.