“வாணியே சரண்”/மீ. விசுவநாதன்


“கற்றநற் கல்வியும் கல்வியால் பண்புமே
பெற்றிடச்செய் வாணியே! இச்சகத்தில் சுற்றியுள்ள
மற்றதெலாம் ஒன்றுமிலை! வாக்கினிலே நீயிருந்து
வற்றாத வாழ்தினையே தா.”

“நல்ல தமிழ்ச்சொல்லால் நாமணக்கப் பாட்டெழுதும்
வல்லமை தந்த மணிமகளே! – கல்மனத்துள்
பொல்லாத ஆணவத்தைப் பொசுக்கிடவே என்தலையில்
மெல்லவுன் தாள்களை வை.”

(இன்னு (23.10.2023) ஸ்ரீ சரஸ்வதி பூஜை தினம்)

……………………………………………………….

2 Comments on ““வாணியே சரண்”/மீ. விசுவநாதன்”

Comments are closed.