
ஆயுதத்தை பூஜையிலே
வைப்போம்.!
அன்பொன்றே சிந்தையிலே வைப்போம்!
ஆயுதத்தைக் குன்றாக குவிப்போம்.!
குவித்தவற்றை ஒன்றாக ஒழிப்போம்.!
கொல்லுவதே தொழிலாச்சு தடுப்போம்!
கொல்லாமை குறள்நெறியை வளர்ப்போம்.!
கொலைக்கருவி அத்தனையும் உடைப்போம்!
குமுகாயம் சரித்திரத்தைப் படைப்போம்.!
சரஸ்வதியை மனதார துதிப்போம்.!சத்தியமாம்
விளக்கேந்தி நடப்போம்!
எத்திசையும் இணக்கத்தை நினைப்போம்.!
எதிரியின்றி உறவுமலர் வளர்ப்போம்.!
சமாதானம் ஓங்கவழி வகுப்போம்..சகலருக்கும் மரியாதைக் கொடுப்போம்.!
கொலை களவு புலால் உணவு தவிர்ப்போம்!
கொலுவிருக்க கலைமகளை அழைப்போம்.!
. பெங்களூரூ.
