சரஸ்வதி பூசை கொண்டாட்டம்/சசிகலா விஸ்வநாதன்

ஆயுத பூசை போல்

ஒரு பூசைஉண்டோ?

அம்மா புத்தகங்களை
கோலம் போட்ட
மணையில்
வைக்க;

கணக்கு நோட்டும்,
ஆங்கில புத்தகமும்,
முதலிடம் பிடிக்கும்

கூடுதலாக மஞ்சள்
சந்தனம்,குங்குமம்

வைக்க;அம்மன் அருள் கூடுமோ?

அத்தை சொல்லிடுவாள்:
சிறு கண் சிமிட்டலுடன்;

பூசையில் புத்தகம்
வைத்தாயிற்று,;
விஜயதசமி பூஜை
வரை யாரும் படித்தலாகாது!

வருடம் ஒருநாள்
இப்படி ஒரு பண்டிகை!

ஆஹா! ஆஹா!

இந்த திருநாள்
மாதம் ஒருநாள்
வரக்கூடாதா?


23-10-2023