கலைவாணி/பி. ஆர்.கிரிஜா

கனா ஒன்று
கண்டேன் வாணி
கனா ஒன்று
கண்டேன் !

காணக் கிடைக்காத
பெரும் காட்சி
கண் முன் விரியக்
கண்டேன் !

காணுமிடமனைத்தும்
கலை வாணி
உன் மோன
நிலை கண்டேன் !

பேதை நான்
நிலை மறந்து
சொல் இழந்து
நின்றேன் !

உன் மோனத்தில்
எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்
என் அன்னையே !


19/09/2023