அழகியசிங்கர்/எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

(அழகியசிங்கரின் என்பா வகை)

  1. எல்லோரும் நலமாக
    இருக்க வேண்டும்
    மற்றவருக்கு
    உதவியாய்
    இருக்க வேண்டும்
    அந்நியாயத்தைத்
    தட்டிக் கேட்க வேண்டும்
    காசு பணம் முக்கியமில்லை

2.
எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும்
வேண்டுகிறேன்
கண்ணை மூடி
கடவுள்முன்
பிறர் பொருள்மீது
ஆசை வேண்டாம்
இருப்பது போதும்
என்மனமே

3.
எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும்
இப்புவி மீது
அமைதி வேண்டும்
மரணமில்லா வாழ்வு
வாழ வேண்டும்
வேண்டும் எல்லாருக்கும்
எல்லாம்

4.
எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும்
உண்மைதான் ஆனால்
அப்படி நிகழ்வதில்லை
சிலர் எதற்கெடுத்தாலும்
முணுமுணுக்கத் தவறுவதில்லை
வாழ்க்கை அவர்களுக்குக்
கசப்புதான்

5.
எல்லோரும் நலமாக
இருக்க வேண்டும்.
புவியில் நாமிருப்பது
நிச்சயம் இல்லை.
அமைதியைத் தேடி
நீங்கள் செல்லுங்கள்.
வாழ்க்கையில் காண்பது
இன்பமயம்