
(அழகியசிங்கரின் இன்றைய என்பா)
( *1* )
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
எல்லோரும் அதற்கு,
தம்மைத் தாமே
தினம் விரும்பி புதிப்பித்துக் கொள்ள
தீவிரமாக முயல வேண்டும்
( *2* )
எல்லோரும் நவமாக இருக்க வேண்டும்.
அது எப்படி நடைமுறையில் முடியும்?
அது ஒரு நல்ல கனவு
கனவு எல்லாம் நினைவாகுமா?
( *3* )
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்;
என்றே நானும் மிகவும் ஆசைப்பட்டு
என்னால் ஆனது எல்லாம் செய்ய
எல்லாம் வல்லவன் அருள்வான்.
( *4* )
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
எல்லோரும் அதற்கு
என்ன பாடு
படுகிறார்கள்; படும்
பாட்டில் தம்
நலத்தை தொலைத்து விடுகிறார்கள்!
( *5* )
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்;
அதே குறியாக,
அன்னை சமாளிப்பாள்;
அப்பாவின் கோபத்தையும்,வீட்டு பட்ஜெட்டையும்;
எளிதான விளையாட்டு போல.
24-10-2023
[25/10, 10:53] Sasikala Viswanathan: அழகியசிங்கரின் என்பா
தொடர்ச்சி …..
( *6* )
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்;
என, எல்லோரும் எப்போதும் நினைவில்
நிறுத்த; எல்லோரும்
எப்போதும் பெறுவார்;
எப்போதும் நலமாய் இருப்பார்.
(7)
எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும்;
நான் நினைத்தால் மட்டும் போதுமா?
என்னை சுற்றியுள்ளோரும் அவ்வாறு நினைத்தால்,
எல்லோரும் நலமாக இருப்பார்.
(8)
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்?
எல்லோருமே சில சமயம் பிரச்சனைகளை
சந்திக்கதானே செய்வார்கள்? எப்போதும் எதையும்
சந்திக்க தயாராக இருப்போம்.
(9)
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
மனதில் நல்லெண்ணம் சுரந்து வர
செய்கையில் கருணை கூடிய வர
நலமாக இருப்பார்கள்; எல்லோரும்.
(10)
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
எல்லோரும் பலமாக இருக்க வேண்டும்.
எல்லோரும் அன்புடனும் இருக்க;
எப்போதும்.
எல்லோரும் நலமாக இருப்போம்.
சசிகலா விஸ்வநாதன்
25-10-2023
