செ.புனிதஜோதி/தியான அறை

ரமணா
உன் தியான அறையில்
கிட்டிய அநுபூதியை
அணுஅணுவாய்
ஒளிரச் செய்கிறாய்.

அது
அடர்ந்த
இருள் வனத்தில்
வழிகாட்டும்
மின்மினியாய்
ஒளிர்கிறது
என் தபோவனத்தில்.

என் வெறுமைகள்
தனிமைகள் தொலைந்து
இயற்கையின் பிள்ளையைப் போல
விசாலித்தன மனம்.

இருள் கூட
மலரைப்போல்
மலர்ந்திருந்தது.
மீண்டும்
ஒரு கருவறையின்
வாசம் .

கசடுகள்
விழிவாசலில்
வெளிநடப்பு செய்ய..செய்ய
கனிதரும் மரமாய்
வேர்விடத் தொடங்கியது
என் கருணைகள்.
பூரணசந்திரனாய்
ஒளிர்கிறேன்.

இதோ
உன் தியான அறை
பரிசுத்தமான
என்
தாயின் கருப்பையாக
ஒளிர்கிறது.