காட்சி என்பது ஒரு வ(லி)ழி/கலைச் செல்வி


அழகான பூக்களோடு நின்று ஒருவர் விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்
பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது

ஒரு புகைப்படத்தில்
பூக்களை தொட்டுக் கொண்டார்
அடுத்த புகைப்படத்தில் பூக்களைக் கைகளில் மென்மையாக ஏந்திக் கொண்டார்
அடுத்ததில் அதே பூக்களை முத்தமிட்டுக் கொண்டார்
பின் இறுதியாக
ஒரு கொத்து பூவை கைகளில் பறித்து வைத்துக் கொண்டார்..

சிரித்துக் கொண்டே எப்படி
ஒரு சந்தோசத்தை பறிக்கமுடியும் என்பதை நான் நேற்று அவரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் .


26.10.2023