“நாய் ஒன்று
குப்பைத் தொட்டியைக்
கிளறிக்கிளறி அதில் தனக்கான உணவைத் தேடுகிறது
சிறுவர்கள் எறியும்
கல்லெறிகளுக் கிடையிலும்…
மனக்குப்பையைக் கிளறிக்கிளறி என்னை
“நான் “தேடிக் கொண்டே இருக்கிறேன்
பொறாமை, சூது, பொய், களவு, கவலை
போன்ற கற்கள்
என்மீது எறியப்பட்டுக் கொண்டே
இருந்தாலும்
விடாமுயற்சியுடன்
“நான் யார்?” என்ற
ஆன்ம நண்பனைத்
தேடும் வேட்டை ஓயாது”.
(26.10.2023 07.29 am)

