வீரம்


ஆர் வத்ஸலா

ஒளிந்திருந்த
வெயில் பெண்
மழை நின்றவுடன்
ஓடிவந்தாள்
கண் சிமிட்டிக் கொண்டு

என் அவளை போலவாம்

குனிந்த தலையை
சற்றே தூக்கி
ஒரு சிறு கீற்று புன்னகை உதிர்க்கும்
என் அவள்!

பூக்களை அரவணைத்துக் கொண்டு
மல்லி பந்தல் மேல்
முகம் கவிழ்த்து
தூறலால்
என்னை
லேசாக தொட்ட
மழையே
என்னவளுக்கு
உறை போட காணாது
இந்த வெயிலுக்கு ரொம்பத்தான் வீரம்

9/11/21 காலை 10 மணி