ஞானக்கூத்தன்/ஒரு பையன் சொன்ன கதை

ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு எதையோ தின்றதாம் – ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்.

தெருவெல்லாம் பசியோடு பறந்து
எங்கே என்ன கிடைத்ததோ?
இப்போது தின்கிறது காக்கையென்று நினைத்துக் கொண்டானாம். ஒருவேளை தன் வீட்டுக் கொல்லையில்
உலர்த்தி வைத்ததாய் இருக்குமோ
என்று நினைப்பு வரவே விட்டானாம் ஒரு கல் காக்கை மேலே என்னவோ கவலையில் நான் இருந்தபோது என்னமோ என்னவோ கவலையில் நான் இருந்தபோது
ஒரு பையன் சொன்னான் இந்தக் கதையை.

(நேற்று 14வது இணைய கால கவிதை அரங்கில் வாசித்த ஞானக் கூத்தன் கவிதை)