
காகிதத்தில் ஒரு கோடு என்னும் புத்தகத்தில் இருந்து ஆத்மாநாம் கவிதை.
வாசிப்பது சிறகா
.
தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும்
நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல
கற்பனை வாழ்க்கையிலும் தான்
நிஜ வாழ்க்கையில் தோன்றுவது சுலபம்
ஏனெனில் அங்கு அனைவரும் தோற்றம் அளிக்கிறார்கள்
டீ கொடுப்பதில் சாப்பாட்டுக்கு அழைப்பதில்
திருமணங்கள் நடத்துவதில்
ஆபீஸ் போவதில்
சினிமா போவதில்
நாடகங்கள் போவதில்
இசை கேட்பதில்
இப்படி பல் வேறாக
கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம்
அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள்
ஒரு விஞ்ஞானி யாக
ஒரு தத்துவ வாதியாக
ஒரு சிற்பியாக
ஒரு ஓவியனாக
ஒரு கவிஞன் ஆக
ஒரு இசை ரசிகனாக
ஒரு நாடக இயக்கக் காரராக
ஒரு கூத்துக் காரரா க
ஒரு நாட்டிய ரசிகராக
ஒரு திரைப்படக் கார ராக
இவற்றில் நாம் யார் ?
கண்டு பிடிப்பது கஷ்டம்
ஏனெனில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் உள்ளது
அதன் கண்டுபிடிக்கும் காலத்தில் கூட
நாம் கண்டு பிடிக்க மாட்டோம்
மீண்டும் இவ்வாறு இருக்க
1-11-2023.
