.

பிறிதொரு நாளின் பிற்பகலில்
கடற்கரை மணல்வெளியில்
எதிர்பாராது கிடைக்கப் பெறும்
தேநீர்ப் பொழுதொன்றில்
மௌனங்கள் பேசிக்கொள்ள
ஈர்க்கப் பெறாத நேர் துருவங்களாய்
முதுமையின் முகவரி முகத்திலேந்தி
நீயும் நானும் அமர்ந்திருக்க
காதலின் தோல்வியும்
தோல்வி தந்த வலிகளும்
நம் வாழ்தலின் வேர் அசைக்காது
எவருடைய கவிதைக்கோ
கருப் பொருளாகிப் போகலாம்.
.
