சசிகலா விஸ்வநாதன்/கடலளவு அன்பும் கரிக்கும் அவ்வப்போது

இனிய மாலை
சொல் புதிது.
வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்.
புதன் கிழமை மாலை மணி 6.15.
இணைய கால கவியரங்கம்.
கவிதையின் தலைப்பு.

  

அன்னையின் முகம்
அன்பானது; கனிவானது.
என்று மட்டும்
நினைக்க முடியாது!
தன்மை சிறிதும் காட்டாள்; அவள்.
அவள் போட்ட கோட்டை நாம் தாண்ட;
கனல் முகம் காட்டி
கண்ணாலே எரித்து விடுவாள்.
பிடி சாம்பல் ஆக்கிடுவாள்; எம்மை.
தயிர்மத்து,கரண்டி காம்பு, விசிறி கம்பு;
எதுவும் தேவையில்லை; அவளுக்கு.
சுடு சொல் வேண்டாம்.
“அப்பா வரட்டும்” என்ற
ஆர்ப்பாட்ட பயமுறுத்தல்
இருக்காது
தணியா கோபம் காண்பிக்க அவளுக்கு;
பேசா வாயும்,கனியா மனமும் மட்டும் போதும்.
மண்டியிட்டு ” மன்னாப்பு ” கேட்க
“சட்”என மனமிரங்கி
இனி ஒருநாளும்
“இது கூடாது” என்ற,கறார்
அறிவுறுத்தலுடன் ஒரு ” தலை கோதல்”
வா! வந்து சாப்பிடு!
அத்துடன் முடிந்து போகும்… இனிமையாய்.
இதற்குள் மாலை மணி ஆறு
ஆகியிருக்கும்!
தண்டனை என்னவா?
அன்றைய விளையாட்டு நேரம் முழுவதும்,
அம்மாவோடு போராடுவதில் போயிற்றே!
அதைவிட வேறு கொடுமை வேண்டுமா?


1-11-2023