
இன்று (05.11.23) விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த, எனது கவிதை கீழே பதிவு செய்கிறேன்.
ஆழமற்று இருந்தால்
இத்தனை ஆர்ப்பரிப்பு
தேவையில்லை.
பரந்து கிடக்காமல்
நாலு எல்லைக்குள்
சுருங்கிக் கிடந்தால்
இத்தனை அலைக்கழிப்பு
தேவையில்லை.
தேடித்தேடி, மீண்டும்
சலிக்காமல் தேடுகிற
ஆர்வம் இல்லாமலிருந்தால்
இத்தனை பரபரப்பு
தேவையில்லை.
ஆர்ப்பரிப்பும்
அலைக்கழிப்பும்
பரபரப்பும் இருந்தாலும்
உலகைத் தலைகீழாய்
புரட்டவியலாது
எனத் தெரிந்தும்
தெரிந்ததை
மறக்க வழியில்லை.
புரிந்ததை
தொலைக்க வழியில்லை
சிந்திக்கத் தெரிந்த
மனசுக்கு
அதுவே தண்டனை.
.(பூபாளம் கவிதைகள் “குளத்துக்கு அலைகளில்லை” தொகுப்பிலிருந்து ).

அருமை. என் அருமை நண்பன் மதுவந்தியின் கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று !
எதார்த்தம் பகரும் மிக அருமையான கவிதை
அருமை.
The whole truth! Wonderfully penned as a poem