தஞ்சாவூர் ஹரணி கவிதை

சொல் புதிது – இணையக்காலக் கவியரங்கம் 19
நாள் – 6.11.2023 நேரம் – 6.09

பல்லிடுக்கில் சிக்கிய உணவுத்
துணுக்கு எடுக்கும்வரை
வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது…

தொண்டையில் சிக்கிய மீன்
முள்ளொன்று எடுக்கும்வரை
வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது..

கண்ணினுள் விழுந்த கொசுவொன்று
எடுக்கும் வரை
வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது…

எங்கும் போக வழியின்றி
நெடுநேரம் அடக்கிய சிறுநீர்
கழிக்கும்வரை வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது…

ஒவ்வொரு நாளும் வழியற்ற
வலிகள்.. சிக்கல்கள்.. பிரச்சினைகள்
துன்புறுத்தும்போதெல்லாம்
வேறு நினைவுகளின்றி
அனுபவிக்கையில் தோனுகிறது
மேற்சுட்டிய வலிகளே தொடர்ந்தால்
தேவலாம் என்று…

000

One Comment on “தஞ்சாவூர் ஹரணி கவிதை”

Comments are closed.