ஞானக்கூத்தன்/எங்கள் தமிழ்

எங்கள் தமிழை நாங்கள் பேசுவோம்.
உங்கள் தமிழை நீங்கள் பேசுங்கள்.
எங்கள் தமிழில் மம்மியும் உண்டு டாடியும் உண்டு மம்மியும் டாடியும் யாரெ ன்பதை
எங்கள் குழந்தைகள் நன்கறிவார்கள். பலபல மொழியில் பக்கத்தில் பக்கத்தில்
வளரும் சூழலால் பக்கத்தில் வரும் . எங்கள் மொழியில் அவையும் உண்டு நயினா உண்டு வாப்பா உண்டு.
ஃபாதர், மதர் உண்டு எங்கள் தமிழில்
ரைஸ், சப்பாத்தி, பூரி, சப்ஜி உண்டு
எங்கள் உயிர் உங்கள் எங்கள் தமிழில் சுடிதார் உண்டு ஜிப்பா உண்டு எங்கள் தமிழை நீங்கள் பேசுங்கள்
உங்கள் தமிழை நீங்கள் பேசி
என்ன சாதித்தீர்கள் சொல்லுங்கள் ஆண்டாண்டு காலமாய்
கூடி வசித்த பூமியை இழந்தீர்கள்
செம்மறி ஆடுகள் முட்டு முட்டுவது போல.ன
அலைகள் கரையை முட்டும் கடலை இழந்தீர்கள்
பள்ளி செல்லும் குழந்தைகளை
பள்ளி செல்லும் குழந்தைகளை
அவர்களைக் கொண்டு போய்விடும் மாதர்களை கட்டிலில் படுத்துக் கிடந்த முதியோர்களை சுறுசுறுப்பான இளைஞர்களை இழந்தீர்கள்
என்றைக்கிருந்தது எல்லோருக்கும் ஒரு தமிழ்?
உங்கள் தமிழை நீங்கள் பேசுங்கள்
எங்கள் தமிழை நாங்கள் பேசுவோம்.

( இணையகால கவி அரங்கத்தில் வாசித்த ஞானக்கூத்தனின் ஏழாவது கவிதை)