
இணையக்கால கவியரங்கம்
5/11/2023.
புத்தரும் ஏசுவும்
தோற்றுப்போனார்கள்
வாழும் மாந்தரிடை வன்மம்
குறையவில்லை
அகிம்சையைத் தூக்கிப் பிடித்த காந்தியின் தேசமிது
தேசபிதாவைக்காப்பாற்றிக்கொள்ள முடியாமல்
கொன்று போட்டோமே நாம்
அறிவினான் ஆகுவதுண்டோ
பிறிதின் நோய் தந்நோய்போல்
போற்றாக்கடை போதித்த வள்ளுவமும்
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்
வழங்கிய வள்ளலாரும்
ஹமசிடமும் இஸ்ரேலிடமும்
நின்று பேசிடத்தான் முடியுமா?
அறிவுக்குருடர்கள்
கேள்விச்செவிடர்கள் முன்னே
ஆயிரம் ஆயிரமாய்
மாண்டுபோவது பெண்களும் குழந்தைகளும்.
ஐக்கிய நாடுகள் சபையொன்றுண்டு
அறிவீரோ
மார்கழியில் பஜனைசெய்வார்களாம்.
