ஹரிஷ் புதாடி/நெல்லி மரம்

பழங்குடிகளின் பணியர் மொழி யில், அவர்களின் கவிதை, தமிழில் மொழிபெயர்ப்பு நிர்மால்யா அவர்கள்.
கவிதை வாசிப்பது


சிறகா.

நெல்லிமரக் காய் தேடினோம்
அண்ணனும் அக்காவும் கூட நானும்
பெரிய குன்றின் அடிவாரத்தில்
பச்சிலையும் பழச்சாறு ம் மணக்கும் வயலோ ரம்.
யானை உண்டு புலி உண்டு காட்டு மிருகங்கள் உண்டு
கவனமாக போங் க பிள்ளைகளே
காட்டுக் கொடிகள் காலில் சிக்கி
அட்டைக்கு ஒரு துளி ரத்தம் கோடுத்து
பெரிய குன்றை எட்டி விட்டோம்
எங்கே, நெல்லிமரத்தை எங்கும் காணோம்
நான்கு சுவர்களுடன் வானம் முட்ட எழுந்து நிற்கும்
ஒரு வீடு.
அதற்கொரு பெயர் ‘ ரிஸா ர்ட். ‘

6-11-2023

One Comment on “ஹரிஷ் புதாடி/நெல்லி மரம்”

Comments are closed.