மதுவந்தி/ஆற்றங்கரை மரம்

விருட்சம் இணைய கால கவியரங்கில் இன்று 06.11.23, நான் வாசித்த கவிதை கீழே பதிவு செய்கிறேன்.

எதற்கும்
வளைந்து கொடுக்கிற
நாணல்.
எதற்கும்
வளையாமல் கிடக்கிற
பாறை.
இரண்டாயும் இருக்க
எனக்குப் பிரியமில்லை ….
காலடியில் கதை சொல்லும்
நதி மகளைப் பரிவோடு கேட்டு,
பசுமையாய் நிழல்
பரப்பி குளுமையை
நிரப்பி,
ஆழத்தில் ஸ்திரமாய்
வேரூன்றி,
வானத்தில் கனவாய்க் கிளை
பரப்பும்
ஒரு ஆற்றங்கரை
மரமாயிருக்க
ரொம்பப் பிரியம்.


( ஆளுக்கொரு வானம் தொகுப்பிலிருந்து. )

2 Comments on “மதுவந்தி/ஆற்றங்கரை மரம்”

Comments are closed.