இணையக்கால கவியரங்கம்
6/11/23

.
அது அதுவும் அங்கங்கே
நிகழ்ந்து கொண்டேதான்
யார் எங்கு போனால் என்ன
போகாவிட்டால் என்ன
எதற்காகவும் நிற்பதில்லையே எதுவும்
புலம்பல்கள் இருக்கலாம்
புகழ்ச்சிகள் இருக்கலாம்
வசைகள் இருக்கலாம்
வரம்புகள் இருக்கலாம்
வழிபடல் இருக்கலாம்
யாருக்காகவும் எதுவும்
காத்திருப்பதும் இல்லை.
அதன் ராஜபாட்டையில்
தொடர்கிறது காலம்
யாரையும் சட்டை செய்யாமல்.
கதியைக்கூட்டுவதுமில்லை
குறைப்பதும் இல்லை
யாரிட்ட கட்டளையோ
வரம்பு ஏதும் உண்டோ
யார் அறிவார்
யார் புகல்வார்
பார் சுழலும் ரகசியத்தை
யாரே பகரவல்லார்.
