
இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
புதன்கிழமை இணையகால கவியரங்கம்
மாலை மணி 6.15
கவிதையின் தலைப்பு
நல்லெண்ணம்ஆகலாம்.
இன்று நல்வினை தரும் ஒன்று,
நாளை தீவினை பயக்கலாம்.
நிலையில்லா ஒரு மனித மனம்:
ஒரு உலக வாழ்க்கை:
நன்மைக்கும் ,தீமைக்கும்
நல்வினைக்கும், தீவினைக்கும்
நடுவே நிலையாய் நின்று இருப்பது;
நிரந்தரமான நிரம்பல்;நித்தியம் சத்தியமாய்
இருப்பது
நல் எண்ணம்
மட்டுமே
மனமே! நல் எண்ணத்தை
என்றும் விதைத்து விளை…
நன்மையாவதோ
தீமையாவதோ
யார் அறிவார்?
நீ அதன் கர்த்தா அல்லவே
8-11-2023
