வருத்தம்/வைதேகி

இருபத்தொன்றாவது இணையக்கால கவியரங்கம். 08.11.23
.
உரையாடல்கள் ஏதுமின்றி
அவன் அவனாக இருக்க
இவள் இவளாக இருக்க
எரியும் ஊதுபத்தியில்
ஒட்டிக்கொண்டு கிடக்கும்
உதிர்ந்திடாத சாம்பலைப் போல்
அசைந்து கொண்டிருக்கின்றது
அவர்களுக்கிடையேயான வருத்தங்கள்.

.