சிரிப்பு/சுரேஷ் ராஜகோபால்

சொல் புதிது இணையக் கால,22வது கவி அரங்கம் , நாள் 09 11 2023, கிழமை :: வியாழன், நேரம் மாலை ஆறு மணி, தாம்பரத்திலிருந்து சுரேஷ் ராஜகோபால்,

சிரிப்பு ஒரு அருமருந்து
முடிந்த மட்டும் சிரியுங்கள்
ரத்த ஓட்டம் சீர்ப்படும் .

சொந்தங்கள் பலப்படும்
நட்பு வட்டம் பெருகிடும்

சிரிப்புக்கு விலையில்லை
நம்மிடம் தடையில்லை
சிரித்திட மனம்
மட்டும் வேண்டும்
யாரையும் புண்படுத்தாது
சிரிக்க வேண்டும்.