அசைவு/வைதேகி

இருபத்திரண்டாவது இணையகால கவியரங்கம்.09.11.23


திருத்தி அமைத்ததால்
மருந்துக்குக் கூட மரங்களற்று
அகன்று கிடக்கும் நெடுஞ்சாலைகளில்
உயிர்வளியின் மாசகற்றி மெருகூட்ட
வழி நடுவே வைக்கப்பட்ட அரளிகள்
கிளை பரப்பி நிழல் தராதெனினும்
வெட்டவெளியில் வேரூன்றி
நகர்வுகளின் அதிர்வில் அசைந்தபடி
தன் முனைப்பாய்…
பயணிப்போரையும் அசைக்கின்றன
இடையறாது….

.

One Comment on “அசைவு/வைதேகி”

Comments are closed.