மதுவந்தி/விரிந்திருக்கிறது வானம்

இன்று 09.11.23 விருட்சம் இணைய கால கவியரங் கில் நான் வாசித்த கவிதை கீழே.

உன் கவிதை எனக்கும்
என் கவிதை உனக்கும்
போட்டியில்லை
சற்றே மூச்சு விட்டுக் கொள்.

சிவந்த சூரியன்
சிரிக்கும் நிலவு
இதற்கு மட்டும்
சொந்தமில்லை
வானம்.

ஒரு கணமேயானாலும்
பளீரிட்டுப்போகிற
விண்கல்

நொடிக்கொரு நிறம்
காட்டி ஜொலிக்கும்
நட்சத்திரம்

பார்த்தவுடன்
பார்வையில்
நிறைகின்ற
நட்சத்திரம்

தொலைநோக்கியில்
மட்டுமே வசப்படுகிற
நட்சத்திரம்

ஏவி விடப்பட்ட
செயற்கை
விண்கலம்

அனைத்துக்கும் இடம் கொடுத்து
இன்னும் விரிந்திருக்கிறது வானம்

உன் கவிதை எனக்கும்
என் கவிதை உனக்கும்
போட்டியில்லை.

. (ஆளுக்கொரு வானம் தொகுப்பிலிருந்து.)

One Comment on “மதுவந்தி/விரிந்திருக்கிறது வானம்”

Comments are closed.