ஹரணி கவிதை

என்னங்க நீங்க
ஒழுங்கா கைரேகை
வைக்கமாட்டேங்குறீங்க?
என்று கேட்கிறாள்
ரேஷன் கடையில்
பணியாற்றும்
எரிச்சலுற்ற பெண்…

உங்க கவிதை
ரொம்ப நல்லாருக்கு
என்று சொல்லும்
என்னைப் பார்த்து…

கவிதையெழுதும்
விரலுக்குக்
கைரேகை வைக்கத்
தெரியவில்லை…