தீபத் திருநாள் தீபாவளி !/பி. ஆர்.கிரிஜா

வண்ண விளக்குகள்
ஒளிரும் நன்னாள் !
அனைவரும் ஒன்றாய் கூடி
மகிழும் பொன்னாள்
புத்தாடை அணிந்து
இனிப்பைப் பகிர்ந்து
மகிழும் திருநாள்
அகம் முழுதும் அன்பால் இணைந்திடும் நாள்
அக இருள் அகன்று
புறமதில் இன்பம்
பெற வேண்டும் நாள்
பெரியோர், சிறியோர்
உற்றார், உறவினர், நண்பர் அனைவரும்
ஒன்றாய் கூடி பரமனைத் துதிக்கும் பேரின்ப நாள்
நல்லவை நினைத்து
தீயவை களைந்து
நற்பணிகள் ஆற்றும்
தீபத் திருநாள்
இவ்வையகம் தழைக்க கூடி மகிழ்ந்து கொண்டாடும் நாள் !


9/11/2023