
தினம் தினம்
இவ்வளவு அதிகாலையில்
என்னை எழுப்பிவிடுவது யார்?
நெஞ்சில் நீங்காத வருத்தம்
நீங்கவே நீங்காத கால்வலி
‘ எனக்கு ஏன் இதை செய்தீர்கள்?’ என
பதில் வராத ஒரு கேள்வி
இப்போதைக்கு இந்தக் குளிர்
எப்போதும் எனை ஆளும் தனிமை
வீட்டுக்குப் போக
வழிமறந்த குழந்தைபோல
என் தூக்கத்திற்கு
எப்படித் திரும்புவதென
இந்த இருட்டில் திகைத்து நிற்கிறேன்
10.11.2023
அதிகாலை 3.39
