
குழந்தையின் உடைந்த பொம்மையைச் சரிசெய்தல்…
பத்திரமாக வைக்கிறேனென்று
தொலைத்த பொருளைத் தேடல்..
நிமிடத்தில் ரயிலைத் தவறவிடல்.
பேருந்தில் ஏறியமர்ந்தபின்
பெய்யும் மழையை உணராதுறங்கல்..
நல்ல காபிக்குக் காத்திருத்தல்..
நனைந்த செடிகளைக் கண்டு மயங்கல்..
சூடாய் இருப்பதில் அளவு மீறி உண்டு திணறல்..
என்பதும் வாழ்வாகவே
வாழ்விற்கான வரையறையின் ஊடே….
சிலருக்கும் சிலசமயம்
பலருக்கும்..
