வைதேகி/கவிதை

இருபத்துமூன்றாவது இணையக்கால கவியரங்கம். 10.11.23


.


விரல்களின் நுனியில்
துளிர்க்கும் என் எழுத்துகள்
ஓர் இலையை அசைத்துச்
செல்லுமெனில்…
மனக்காயத்திற்கு மிருதுவாய்
மருந்திடுமெனில்…
காதலின் கதகதப்பைச் சிறிது கண்ணியமாய்ச் சொல்லுமெனில்..
நானும் எழுதிவிட்டுப் போகின்றேனே
கவிதை என்ற பெயரில்
எனக்குத் தெரிந்ததை….

.