
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக் கிளைகளுக்கும்
இடமுண்டு
என் பால்ய உலகில் சுட்டுப் பொசுக்கி தின்பதுண்டு சிட்டுக் குருவிகளை
துவாரம் விழுந்த
கால்சட்டைப் பையில் கைவிடச் சொல்லி யிருக்கிறேன்
பக்கத்து வீட்டுப் பெண்ணை
கடிதமெழுதி சித்தியை காதலித்த கணம் கலைந்த உலகம் இன்னும் சுழல்கிறது நினைப்பில்
கிழிந்த காற்றாடியாய்
(23வது இணைய கால கவி அரங்கில் வாசித்த கவிதை)
